இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கௌரவ டொக்டர் பட்டத்தை நிராகரித்த டெண்டுல்கர்


கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கௌரவ டொக்டர் பட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நிராகரித்துள்ளார். இதை ஏற்க முடியாததற்கான காரணங்களை அவர் மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுரஞ்சன் தாஸ் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு பல்கலைக்கழகமும் வழங்கும் டொக்டர் பட்டத்தையும் தான் ஏற்பதில்லை எனவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தையும தான் ; ஏற்கவில்லை எனவும் சச்சின் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தததாக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

டொக்டர் பட்டத்தை டெண்டுல்கர் நிராகரித்ததனையடுத்து ; கொல்கத்தா பல்கலைக்கழகம் அதனை 5 முறை உலக சம்பியன் பட்டத்pதனை வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

டிசம்பர் 24ம்திகதி நடைபெறவுள்ள பல்கலை கழகத்தின் 63-வது பட்டமளிப்பு விழாவில் டொக்டர் பட்டம் வழங்கப்ப்வுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.