ஒருசில கறுப்பு ஆடுகளால் நீதித்துறை களங்கப்படுவதை அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கமிஷன் தர மறுத்ததால் கடையை ஆக்கிரமித்த 4 சட்டத்தரணிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட போதே உயர் நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தனியார் ஒருவரிடம் 3 கடைகளை விலைக்கு வாங்கிய போது பிரச்சினை செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும் என சட்டதத்தரணி ஒருவர் தெரிவித்ததாகவும் பின்னர் ஒரு கடையை ஆக்கிரமித்து இன்னொரு சட்டத்திரணியின் பெயரில் அலுவலகம் ஆரம்பித்தாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பில் வேறு இரு சட்டத்தரணிகளிடம் முறையிட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் எனவே சட்டத்தரணிகள் மீது வழக்கு பதிவு செய்து கடையை மீட்டு தர உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி இவரைப் போன்றவர்கள் சட்டத்தரணி தொழிலில் இருப்பது வெட்கக் கேடானது எனத் தெரிவித்ததுடன இவர்கள் நீதிமன்றத்தில் பணிபுரி வதற்கு பதில் நீதிமன்றத்துக்கு வெளியே ரவுடித்தனத்தில் ஈடுபட் டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
நீதித்துறையின் நேர்மை, பெருமையை காப்பாற்ற வேண்டியது நீதிமன்றங்களின் கடமையாகும். இவர்களைப் போன்ற கறுப்பு ஆடுகளால் நீதித்துறை களங்கப் படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்து குறித்த சட்டதரணிகள் மீது பார் கவுன் சில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். என உத்தரவிட்டுள்ளார்.