Home இலங்கைகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு – ஒருவர் கைது

கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு – ஒருவர் கைது

by admin

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்க்கபட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் மதியம் பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பியபோது காணாமல் போயிருந்த அவர் நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நடராசா போதநாயகி எனப்படும் கர்ப்பிணி பெண் விரிவுரையாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து உருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது அதனை சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More