மெக்சிகோவில் மரியோ கோமஸ் என்ற ஊடகவியலாளர் இனம்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக விளங்குகின்ற மெக்சிகோவில் 2016- 2017ஆம் ஆண்டுகளில் தலா 11 ஊடகவியலாளர்கள் வீதம் 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த தாக்குதல்களில் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அங்கு சியாபஸ் மாகாணத்தின் யாஜலான் நகரில் மரியோ கோமஸ் என்ற ஊடகவியலாளர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்று கொண்டிருந்த வேளை 2 இனந்தெரியாத நபர்கள் அவர்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளனா
இதனையடுத்து மரியோவை அருகில் உள்ளவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில் 2018 ஆண்டில் இதுவரை 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் எனவும், 2000 – 2018ஆம் ஆண்டுகளுக்கிடையில் இதுவரை 138 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் எனவும் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.