168
இந்தியாவின், தனுஷ்கோடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி வர முயற்சித்த பெண் உட்பட மூவரை கைதுசெய்துள்ளதாக ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா விசாவில் திருச்சியில் தங்கியிருந்த கொழும்பைச் சேர்ந்த 42 வயதுடைய ரமணி என்ற பெண் இன்று அதிகாலை தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்பிவர முயற்சித்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இவர் இலங்கை வர உதவி புரிந்த முகவர் ஒருவரையும், அவர் பயணித்த காரின் சாரதியையும் கைதுசெய்த சுங்கத்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love