பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆர்ஜென்ரீனாவுக்கு ஏற்கனவே தீர்மானித்த தொகையைவிட அதிகமாக நிதியளிக்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சந்தையையும் விரைவாக மீட்கும் நோக்குடன் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னர் 50 பில்லியன் டொலர்களை வழங்க முடிவு செய்திருந்த நிலையில் தற்போது 36 மாதகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நாட்டிற்கு 57.1 பில்லியன் டொலர்கள் அளிக்க முடிவு செய்துள்ளது.
ஆர்ஜென்ரீனாவின் பணப்பெறுமதி மோசமான சரிவை சந்தித்துள்ளமையினால் அங்கு வறட்சியின் காரணமாக விவசாய பொருட்கள் ஏற்றுமதியும் வீழ்ச்சி அடைந்துள்ளநிலையில் சர்வதேச நாணய நிதியம் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது