Home இலங்கை மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகத்தின் 45வது ஆண்டு நிறைவு – மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி-2018

மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகத்தின் 45வது ஆண்டு நிறைவு – மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி-2018

by admin

மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகத்தின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி-2018′ நேற்று (27-09-2018) இரவு 07:00 மணிக்கு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டுத் தொகுதியில் ஆரம்பமானது.

இதில் முதல் போட்டியில் கல்முனை லக்கி ஸ்டார் விளையாட்டு கழகத்தை எதிர்த்து கல்முனை பிரிலியண்ட் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்தப் போட்டியில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் கல்முனை பிரிலியண்ட் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

அடுத்து இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகம் சவளைக்கடை அமீர் அலி விளையாட்டு கழகத்துடன் மோதியது. இதில் 2-1 என்ற கோல் அடிப்படையில் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகம் வெற்றியை தனதாக்கியது.

மேலும் இப்போட்டியின் முதல் சுற்றுவிளையாட்டு போட்டிக்கு நடுவர்களாக எம்.பி.எம் ரசிட் மற்றும் உதவி நடுவர்களாக ஜெ.பாதுசா சி.எம் அஸ்வர் மேலதிக நடுவர்களாக சி.எம் நஸார் ஆகியோரும் போட்டியின் ஆணையாளராக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி ஆசிரியர் எம்.எல் ஏ தாஹிரும் இரண்டாவது போட்டியின் நடுவர்களாக எஸ்.எம் உபைதீன் எஸ்.எல்.வை எஹியா அரபாத் ஏ.டபிள்யு றிகாஸ் ஆகியோருடன் மேலதிக நடுவராக எ.வாரீஸ் உட்பட இந்த போட்டிக்கு ஆணையாளராக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம் அமீர்அலி ஆகியோர் கடமையாற்றினர். கலந்து கொண்டிருந்தனர்.

போட்டியின் ஆரம்பத்தில் கிராஅத் ஓதப்பட்டு மறைந்த மர்ஹூம்களான எம்.எல் ஜமால்டின் (எஸ்.பி) எஸ்.எல் நுஹ்மான் ஏ.எம் றசீன் ஏ .சி.எம் அன்சார் கே.எம் இஸ்மாயில் ஏ.எம் பாறுக் எம்.எஸ் சாஜஹான் ஆகியோருக்கு மௌனப்பிராத்தினையோடு போட்டி ஆரம்பமானது

குறித்த போட்டி மின்னொளியில் சிறப்பாக நிறைவடைய அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளன உயரதிகாரிகள் மற்றும் ஈஸ்டன் யூத் விளையாட்டு கழக உறுப்பினர்கள் இணைந்து தத்தமது பங்களிப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More