176
எகிப்தின் வடக்கு கெய்ரோ மாகாணத்தை சேர்ந்த பாடசாலைகளில் எதிர்வரும் காலங்களில் பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களான மிக்கி மௌஸின் படங்களைப் பயன்படுத்தப்படக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்கா உருவாக்கிய கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு மாற்றாக அம்மாகாணத்திலுள்ள ஆரம்பப் பாடசாலைகளில் எகிப்திய ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் முன்னுதாரணமாக வைக்கப்பட வேண்டுமென அம்மாகாண ஆளுனர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாற்றத்தின் மூலம் மாணவர்களுக்கு நாட்டுப்பற்றும், தேசத்தின் மீதான அன்பும் அதிகரிக்கும் என கருதுவதாக மாகாணத்தின் ஆளுனர் தெரிவித்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love