Home இந்தியா சர்வதேச ஆளில்லா விமான போட்டியில் அஜித்தின் அணி 2-ம் இடம் பிடித்து சாதனை

சர்வதேச ஆளில்லா விமான போட்டியில் அஜித்தின் அணி 2-ம் இடம் பிடித்து சாதனை

by admin

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஆளில்லா விமான போட்டில் நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழக அணி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்ரிட்யூட் ஒப் ரெக்னோலஜி, கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக் ஷா என்ற ஆளில்லா விமானம் அவுஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு சவால் விடுத்திருந்தது.

கடந்த 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் அவுஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.  இதில் உலகெங்கிலும் இருந்து 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்ற நிலையில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதில் நடிகர் அஜீத்தை தொழில் நுட்ப ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் குழுவின் தக்ஷா விமானம் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு சென்று அங்கு இருந்து ரத்த மாதிரியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை வந்தடைய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட போட்டியில், அதில் அஜீத் மாணவர் குழுவின் தக்ஷா விமானத்திற்கும் அவுஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் குழுவின் விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.

இதில் விமானத்தின் பறக்கும் திறனைப் பொருத்தவரை தக்ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் மோனாஷ் குழு விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றுள்ளன.  எனினும் நேர்முக தேர்வு மற்றும் ஆய்வறிக்கை ஆகியவற்றிலும் தக்ஷா குழு சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், 0.85 மதிப்பெண் வித்தியாசத்தில் தக் ஷா விமானம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.இதற்கு அவுஸ்திரேலிய நடுவர்களே காரணம் எனவும், திட்டமிட்டு அவர்கள் மதிப்பெண்களை குறைத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. .

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More