சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார இயக்குனராக இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அதன் தலைமை பொருளாதார இயக்குனராக இருக்கும் மவுரிஸ் ஓப்ஸ்பெல்ட் ஓய்வு பெறவுள்ளதனையடுத்து அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள கீதா கோபிநாத் இந்தவருட இறுதியில் கீதா பதவி ஏற்கவுள்டளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1971ல் கொல்கத்தாவில் பிறந்த கீதா கோபிநாத் கொல்கத்தாவில் அமெரிக்க குடியுரிமையும் வைத்துள்ளதுடன் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் கடமையாற்றுகின்றார். . சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக பதவியேற்கும் மூன்றாவது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் த அமெரிக்கன் எக்கனமிக் ரீவ்யு என்னும் பிரபல இதழிலும் துணை ஆசிரியராக உள்ளதுடன் கேரளா மாநில பொருளாதார ஆலோசகராகவும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்பின் துணை இயக்குனராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.