Home பிரதான செய்திகள்இந்திய மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவால்

இந்திய மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவால்

by admin


இந்திய மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவால் என மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லோ(,stuart law) தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்டையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியா உலகின் முதல்தர அணியாக உள்ள வேளை மேற்கிந்திய தீவுகள் 8-வது இடத்தில் உள்ளது. மேலும் இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் விளையாடவுள்ள நிலையில் அவர்களை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாகும் எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான அணிகள் வெற்றி பெறுவதில்லை என்பதனை தாம் புரிந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியா தனது முதலாம் தரவரிசையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More