இலங்கை கிரிக்கெட் அணியில் 40 ஆண்டுகளுக்கு பின் யாழ் இளைஞர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 17 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற இளைஞரேஇவ்வாறு தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களில் இவர் சில சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது. அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
19 வயதிற்குட்பட்ட அணியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள விஜயகாந்த ஒருநாள் சர்வதேச அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ள இவர் 19 வயதிற்குட்பட்ட முதலாவது ஆசிய உலகக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார்.
15 வயதிற்குட்பட்ட அணியில் இருந்தே தான் பந்து வீசி வருகிறேன் எனத் தெரிவித்த அவர் சிறந்த பயிற்சியாளர்கள் கிடைத்ததால் பாடசாலை அணியில் திறமைகளை வெளிப்படுத்த முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார். 15 வயதிற்குட்பட்ட அணியில் இடம்பிடித்த பின்னர் பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திறமைகளுடன் எனக்கு கொழும்பிற்கு வர முடிந்தது எனவும் தற்போது கொழும்பில் பயிற்சி பெற்று வருவதாகவும் இங்குள்ள பயிற்சியாளர்கள் மிகச்சிறப்பாக பயிற்சி வழங்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தை விட இங்கு கிரிக்கெட்டில் வித்தியாசம் இருக்கிறது எனத் தெரிவித்த அவர் தனது திறமைகள் மேலும் வளர்ந்துள்ளதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கு வந்த தான் மொழிப் பிரச்சனையை எதிர்கொண்டதாகக் கூறிய அவர் வீரர்கள் தனக்கு சிங்களம் சொல்லித் தந்ததுடன் அவர்கள் தன்னிடம் தமிழ் கற்றுக்கொண்டனர் எனவும் யாழ்ப்பாணத்தில் இருந்து தான் மட்டுமே வந்திருப்பதாகக் கூறி, தன்னை தைரியப்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். மொழிப் பிரச்சனை இருந்தாலும், தெரிந்த ஆங்கிலத்தில் பேசி நாம் பயிற்சிகளில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்த அவர் தான் தமிழ் என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி, ஒரே அணியாக விளையாடுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
மூலம் பிபிசி
1 comment
I appreciate this endeavour at least at last one tamil youth has been selected in the Sri Lankan national cricket team after prolong 40 years in stretch apart from Muttiah Muralitharan. Hence in fact Muttiah Muralitharan hence belongs to other faction of Sri Lankan Indian origin tamil national hails from Kandy area knows fluency in sinhala. In fact who also from very famous Private school from that area also and elite family member owns their private Luckyland biscuit company by their own. There him self who got so many avenues comparison to so so far away youth from northern Sri Lankan part from Jaffna peninsula. Weldon son show your colours in your battle of cricket who ever against our country. May God bless mother Sri Lanka.