தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் ,தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோர் இன்றைய தினம் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
அத்துடன் கூட்டு எதிரணியோடு சென்றிருந்த தொல்லியல் திணைக்களத்தைச்சேர்ந்த இருவர் முற்றுமுழுதாக சிங்களத்தில் வரலாற்றுக்களை திரிவுபடுத்தி பல பொய்யான தகவல்களை அவர்களுக்கு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறுதியில் கூட்டு எதிரணியினருக்கும் ஆலயத்தை சூழ்ந்த மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பாதுகாப்போடு அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சிங்களத்தில் தொல்லியல் திணைக்களம் கூட்டு எதிரணியினருக்கு கூறிய சில பொய்யான விடயங்கள் கூறப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இந்த கோயிலை இந்த பகுதி மக்கள் உருவாக்கியுள்ளதாகவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் தேவநம்பிய தீஸன் காலத்தை சேர்ந்தது என்றும் 1977ம் ஆண்டு இந்த மலையில் புத்த விகாரை ஒன்று இருந்ததாகவும் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
என்றும் இந்த மலைக்கு சிங்கள பெயர் ஒன்று இருக்கின்றது என்றும் கூறியதுடன் அதற்கு தாம் ஆய்வு செய்ய மக்கள் தடையாக இருப்பதாகவும் அவர்கள் கூட்டு எதிரணிக்கு கூறியதாகவும் துரைராசா தமிழ்ச்செல்வன் கூறுகின்றார்.