சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என தேவசம் போர்ட் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய இளம் சட்டத்தரணிகள் சங்கத்தினர் உச்சநீதிமன்றில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என்னும் தீர்ப்பினை வழங்கியிருந்தது. .
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்ட் இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படமாட்டாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.