172
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் உழவு இயந்திரத்தில் காணியில் வேலையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் ஒன்று வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நண்பகல் வேளையில் இடம்பெற்ற சம்பவத்தில் கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதான அரியராசா ஜெகன் என்பவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love