Home பிரதான செய்திகள்19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது

by admin


19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 144 ஓட்டங்களினால் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டி இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் பங்­க­ளாதேசில் நேற்றையதினம் நடைபெற்ற நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 305 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 144 ஓட்டத்தினால் தோல்வியை தழுவிக் கொண்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More