இன்று காலை கைது செய்யப்பட்ட ஐக்கியதேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, விஜயகலா மகேஷ்வரன் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது
விஜயகலா மகேஷ்வரன், காவற்துறையினரால் கைது….
Oct 8, 2018 @ 05:23
ஐக்கியதேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, விஜயகலா மகேஷ்வரன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் வாக்குமூலம் ஒன்றை வழங்கச் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…