குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில். ஏற்பட்டு உள்ள கால நிலை மாற்றத்தால் வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறையினர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் கடோற்கசன் மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த 96 வயதுடைய முருகன் கிருஷ்ணன் ஆகிய இருவருமே அவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி காவற்துறையினர், கால நிலை மாற்றத்தால் தற்போது ஏற்பட்டு உள்ள குளிர் கால நிலையால் இருவரும் உயிரிழந்தனர் என சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்தனர்.