இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கும் வகையிலான முன்பிரேரணை ஒன்று பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரேரணையில் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ள நிலையில் மேலதிக கையொப்பங்களை பெறும் நடவடிக்கையில் புலம்பெயர் தமிழ் இளையோர் குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த இளையோர் குழுவினர் பிரித்தானியா ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கிறிஸ் பிலிப்பை நேற்று வெள்ளிக்கிழமை (12.10.18) சந்தித்துள்ளனர். இதன்போது இனவழிப்பிற்கு காரணமான இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்வதால், அவர்களின் கை மேலும் ஓங்கும் என்பதனால் இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிலிப், இது தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.