பிரதான செய்திகள் விளையாட்டு

பெடரரை பின்னுக்குத் தள்ளி ஜோகோவிச் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்

ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்வை வென்றதன் மூலம் ஜோகோவிச் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். டென்னிஸ் விளையாட்டின் தரவரிசையில் நடால் முதலிடத்திலும், ரோஜர் பெடரர் 2-வது இடத்திலும், நோவக் ஜோகோவிச் 3-வது இடத்திலும் உள்ள நிலையில் தற்pபோது தற்போது ஷங்காய் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் அரையிறுதி ஒன்றில் நோவக் ஜோகோவிச் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் எதிர்கொண்டு 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் வென்றிருந்தார்.

இதன்மூலம் ஜோகோவிச் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரோஜர் பெடரரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வ தரவரிசை வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.