ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று (16.10.18) மாலை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மத்திய செயற்குழு கூடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோகண லக்ஷ்மன் பியதச தெரிவித்துள்ளார். கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை சம்பந்தமாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை சம்பந்தமாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மத்திய குழு உறுப்பினர்களுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதாக பேராசிரியர் ரோகண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
எனினும், மத்திய அரசாங்கத்தில் இருந்து அண்மையில் விலகிய 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகும் வரையில் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதில்லை எனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
எனினும் அத்தகைய கோரிக்கை ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இதுவரை எவரும் முன்வைக்கவில்லை என பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.