157
இந்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களை செய்துள்ளதாகவும் குறைப்பாடுகள் இருப்பினும் அனைவரும் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பலந்தொட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துரைத்த அவர், இந்த நாட்களில் இடைக்கால அரசாங்கம், கூட்டணி அரசாங்கம் தொடர்பில் பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது எனவும் கூட்டு அரசாங்கமாக இருந்து மக்களுக்கு சேவை செய்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love