கிரிமியாவில் கருங்கடலையொட்டியுள்ள கிழக்கு பகுதியான கெர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இன்று இடம்பெற்ற தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் இதற்கு காரணம் எனவும் ரஸ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
சோவியத் யூனியன் உடைவிற்கு பின்னர், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஸ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையில் ரஸ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவே கிரிமியாவை அந்நாடு மக்கள் கருதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Add Comment