முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். நேற்று முன்தினம் (16.10.18) அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அங்கு முன்னிலையாகியிருக்கவில்லை என்னும் நிலையில் இன்றையதினம் முன்னலையாகியுள்ளார்
இதேவேளை முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா மீதான விசாரணைகள் பக்கச் சார்பின்றி இடம்பெறும் என சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.