ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருந்தது.மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டுமே முன்வந்தமையினால் 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியிருந்ததுடன் முழு அடைப்பு போராட்டமும் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது