இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அதிகளவான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டன.
அந்த பகுதிகளில் மீட்புக்குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது எனவும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது