Home இலங்கைநோயாளர் காவு வண்டிகளில் மருத்துவ கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

நோயாளர் காவு வண்டிகளில் மருத்துவ கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 
வடமாகாண வைத்திய சாலைகளின் மருத்துவ கழிவுகளை நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் ஏற்றி அகற்றும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு வடமாகாண சுகாதார அமைச்சு அறிவுத்தியுள்ளது.

வடமாகாண வைத்திய சாலைகளில் சேரும் ஊசிகள் (சிறிஞ்) , சிறிய மருந்துக்குப்பிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை அகற்ற நோயாளர் காவு வண்டிகளை வைத்திய சாலைகள் பயன்படுத்தி வந்துள்ளன.

அதனால் நோயாளர் காவு வண்டியின் சேவை பாதிக்கப்படுவதுடன் , வண்டியின் சுகாதாரமும் பாதிக்கபடுகின்றது. அதனை கருத்தில் கொண்டு நோயாளர் வண்டிகளில் மருத்துவ கழிவுகளை ஏற்றவதை உடன் நிறுத்துமாறும் அதற்கு வேறு வண்டிகளை பயன்படுத்த சுகாதார பணிமனைகள் மூலம் நடவடிக்கை செய்து தரப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சு வைத்திய சாலைகளுக்கு அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More