204
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படம் ஒன்றை இயக்கி அதில் நடித்துள்ளார். மதுர திரைப்படத்தின் பாடல் காட்சி ஒன்றின் இறுதியில் தந்தையுடன் நடனமாடும் சஞ்சய், தனது திரைப்பட ஆர்வ முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்.
திரைப்பட துறையில் ஆர்வம் கொண்ட தனது மகள் சஞ்சயை அமெரிக்கா அனுப்பி அது தொடர்பான கல்வியை பயிலச் செய்துள்ளார் நடிகர் விஜய். இந்த நிலையில் சஞ்சய் இயக்கிய குறும்படம் சமூகவலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகின்றது.
ஜங்ஷன் என்ற இக் குறும்படம் மர்மத் திகில் கதையாக அமைந்துள்ளது. பகிடி வதை தொடர்பான கதையை மையாக கொண்டு இக் குறும்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியிலும் உரையாடல் அதிகமாகவும் கொண்டுள்ள இப் படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
Spread the love