Home இலங்கையாழ்.நகர் – புறநகர் பகுதிகளில் பெண்களின் சங்கிலிகள் அறுப்பு

யாழ்.நகர் – புறநகர் பகுதிகளில் பெண்களின் சங்கிலிகள் அறுப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், வீதிகளில் சென்ற பெண்களின் சங்கிலிகளை அறுத்து தப்பி சென்றுள்ளனர்.

நல்லூர் மற்றும் சுண்டுக்குளி பகுதியில் வீதியால் சென்ற இரண்டு பெண்களின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அறுத்து தப்பி சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களால் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றே என கண்டறிந்துள்ளதாகவும் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் காணப்படும் கண்காணிப்பு கமராக்களின் (ஊஊவுஏ) உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்ப்பாண காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை நேற்று சனிக்கிழமை மாலை மோட்டர் சைக்கிள் தனது பிள்ளைகளுடன் சென்ற பெண்ணின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அறுத்து தப்பி சென்றதில் , குறித்த பெண் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளாகியதில் காயமடைந்துள்ளார்.

கைதடி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஐயப்பன் பக்தர்கள் போன்று கறுப்பு உடைதரித்து வந்த இருவரே தன்னிடம் சங்கிலி அறுத்ததாகவும் , அவர்களின் மோட்டார் சைக்கிள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டதாக இருக்கலாம் எனவும் அவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்க தகடு பூட்டபடாது மட்டையில் இலக்கம் எழுதி இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More