Home இலங்கைஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க குழு

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க குழு

by admin

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான ஆய்வுகளை முன்னெடுத்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக ஐவர் கொண்ட குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளை நியமிக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து, அதனை மறுசீரமைப்பதற்கு தேவையான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்று பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவே மேற்படி குழு நியமிக்கப்படவுள்ளது.

இக்குழுவானது இரண்டு வார காலப் பகுதியில் அதன் பரிந்துரைகள் ஜனாதிபதிக்கு முன்வைக்க வேண்டும் என்பதுடன் குறித்த பரிந்துரைகளைக் கவனத்திற்கு கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பான அடுத்த கட்ட தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More