Home சினிமா நரேந்திர மோடி வேடத்தில் நடிக்கும் விவேக் ஓபராய்:

நரேந்திர மோடி வேடத்தில் நடிக்கும் விவேக் ஓபராய்:

by admin


தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பற்றிய திரைப்படத்தில் நடிக்க பிரபல நடிகர் விவேக் ஒபராய் ஒப்பந்தமாகியுள்ளார்.  அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் திரைப்படமாகி வருகிறது. நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி, ஹிந்தி நடிகர் சஞ்சய்தத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் படங்களாகி ஏற்கனவே வந்தன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் பால்தாக்கரே, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கப்டன் மிதாலிராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோருடையவாழ்க்கையும் திரைப்படமாகின்றது.

இந்த வரிசையில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையும் திரைப்படமாக தயாராகிறது. இந்த படத்தில் மோடி வேடத்துக்கு நடிகர் தெரிவு நடைபெற்றுள்ளது. இதன்போது முன்னணி நடிகர்கள் பலர் பரிசீலிக்கப்பட்டனர்.

இறுதியில் இந்தி நடிகர் விவேக் ஓபராயை மோடி வேடத்தில் நடிக்க தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனை படத்தின் இயக்குனர் ஓமுங்குமார், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் உறுதிப்படுத்தினர். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. விவேக் ஓபராயின் முதல் தோற்றத்தை ஓரிரு நாளில் வெளியிடுகின்றனர்.
விவேக் ஓபராய் தமிழில் அஜித்திற்கு வில்லனாக ‘விவேகம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More