Home பிரதான செய்திகள் 3 வது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி…

3 வது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி…

by admin

 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.  இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் இன்று நடைபெற்ற நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்புக்கு 364 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணி சார்பாக டைலர் 137 ஓட்டங்களையும் நிகோல்ஸ் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களையும் பெற்றனர்.  லசித் மாலிங்க 93 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை வீழ்தியிருந்தார்.

இதனையடுத்து 365 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 249 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-0 என்ற அடிப்படையில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நியூசிலாந்தினால் இலங்கைக்கு 365 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…


இன்றையதினம் நடைபெறுகின்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்புக்கு 364 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. லசித் மாலிங்க 93 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை பெற்றுள்ளார்.

இதனையடுத்து 365 என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற அடிப்படையில் ஏற்கவே நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More