Home சினிமாதிரைப்படமாகும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை:

திரைப்படமாகும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை:

by admin

இந்தியாவின் முக்கிய நடிகையாக புகழ்பெற்ற, மறைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகையாக அறிமுகமாகி பொலிவுட் வரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக நடித்துப் புகழ்பெற்ற அவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்பதற்காக டுபாய் சென்றிருந்தவேளையில் ஸ்ரீதேவி அங்கு தங்கியிருந்த விடுதியின் குளியலறை தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். தற்போது அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகின்றார்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தமிழில் அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் அவர், தன் மனைவி ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் திரைப்படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் வேடத்தில் நடிக்கும் நடிகைக்கான தெரிவு தற்போது இடம்பெற்று வருகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More