Home சினிமாகமலுக்கு பேரனாகிறார் சிம்பு

கமலுக்கு பேரனாகிறார் சிம்பு

by admin


இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுக்கு சிம்பு பேரனாக நடிப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பை இச் செய்தி மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

1996இல் கமல்ஹாசன் நடிக்க, இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன். தந்தை, மகன் என இரு வேறு பட்ட கதாபாத்திரங்களில் இப் படத்தில் கமல் நடித்தார். இலஞ்சம், ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இன்று வரையில் இப் படம் புகழ் பெற்று விளங்குகின்றது. இந்த நிலையில் 22 ஆண்டுகள் கமலும் சங்கரும் இணைந்து இந்தியன் 2 படத்தை உருவாக்க தயாராகி வருகின்றனர். இந்தப் படத்தில் கமலுக்கு நாயகியாக  காஜல் அகர்வால்  நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தப் படத்தில் இளம் கதாநாயகர் சிம்பு நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சிம்பு என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப் படத்தில் கமலுக்கு பேரனாக சிம்பு நடிக்கின்றார்.  செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் பின்னர் மாறுபட்ட திரைப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More