Home இலங்கை மீனவர் சடலமாக மீட்பு

மீனவர் சடலமாக மீட்பு

by admin


வாகரை காவல்துறைப் பிரிவிலுள்ள சம்புக்களப்பு எனும் காட்டுப் பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகரை பிரதேச செயலாளர் பிரிவு அம்பந்தனாவெளி கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான கந்தசாமி வசந்தராசா என்பவரே இவ்வாறு காட்டு மரங்களிடையே தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் கடந்த புதன்கிழமையிலிருந்து காணாமல் போயிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More