Home இலங்கைநாமல் குழுவினர் கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை

நாமல் குழுவினர் கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் பா ம உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, அங்கயன் இராமநாதன் உள்ளிட்டோர் பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டடங்களிற்கு புதிய வர்ண பூச்சுக்களையும் மேற்கொண்டனர்.

இதேவேளை அங்கு வருகை தந்த நாமல் ராஜபக்ச ஆகியோரை சிறார்கள் வரவேற்ற நிலையில் வெள்ளம், யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறார்களுடன் விளையாட்டு, சினேகபூர்வ செயற்பாடுகள் ஊடாக உள ரீதியான செயற் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மற்றம் மாணவர்களிற்கு உதவிகளும் இன்று மாலை 3 மணியளவில் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More