169
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ இன்று முற்பகல்; கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேர் மீது சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு முன்னிலையாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love