39
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என பிரித்தானியா வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரித்தானியாவின் ஆசியா பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர் மார்க்பீல்ட் பிரித்தானியா சென்றுள்ள சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்தவேளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
மேலும் சபாநாயகரிடம் ஜெனீவா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ள பிரித்தானிய அமைச்சர் மார்க்பீல்ட் தாங்கள் இலங்கையின் அண்மைய அரசியல் நிலவரம் குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love