யாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இணுவில் பகுதியில் தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாலேந்திரன் பாலசந்திரன் (வயது 48) , பாலசந்திரன் தனுஜனி (வயது 44), அவர்களின் பிள்ளைகளான பாலசந்திரன் சுஜன் (வயது 12) மற்றும் பாலசந்திரன் திபுஷா (வயது 08) ஆகியோர் படுகாயமடைந்திருந்தனர்.
அதேவேளை இவர்களுடன் விபத்திற்கு உள்ளான காவற்துறை உத்தியோகஸ்தரான ரி.திவாகரனும் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை பாலசந்திரன் சுஜன் எனும் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக காவற்துறையினர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த ரி. திவாகரன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் குறித்த காவற்துறை உத்தியோகஸ்தரை முற்படுத்த சுன்னாக காவற்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.