பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி – எலீனா காலிறுதிக்கு முன்னேற்றம்


அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் நவ்மி ஒசாகா மற்றும் உக்ரைனின் எலீனா சுவிட்டோலினா ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

4-வது சுற்றுப் போட்டியில் நவ்மி ஒசாகா லாத்வியாவின் சுலெஸ்டானாவுடன் போட்டியிட்ட நிலையில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் மேடிசன் கெய்சுடன் போட்டியிட்ட எலீனா 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அதேவேளை முன்னர் நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறியுள்ள அதேவேளை சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இன்று நடைபெறுகின்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் முதல்தர வீரரான செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் ரஸ்யவீரரான மெட்வதேவ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

ஏனைய போட்டிகளில் ஜப்பானின் நிஷிகோரியும் ஸ்பெயினின் பஸ்டாவும் போட்டியிட குரோசியாவின் கோரிக் பிரான்சின் லுகாஸ் பவுலியுடன் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.