8,100 கோடி ரூபா மோசடி செய்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ள 4 தொழில் அதிபர்களை நாடு கடத்தி அழைத்து வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமுலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் 4 அதிபர்களுக்கெதிராகவே இவ்வாறு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமுலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சில சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் மிது நீதிமன்றம் காலவரையற்ற கைது ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அமுலாக்கப்பிரிவு சார்பில் முன்னிலையான சட்டத்தரணியே மேற்கண்டமவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த 4 பேரும் இத்தாலி மற்றும் நைஜீரியாவில தங்கி இருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு எதிராக ‘ நடவடிக்கை எடுக்க பிறப்பிக்க சர்வதேச காவல்துறையினரை அணுகி அவர்களை நாடு கடத்தி அழைத்துவர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள்னர்.