184
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள 225.31 ஏக்கர் காணி, இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுமென பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார். மேலும் அக்காணிகளுக்கு தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேம்பொடுகேணியில் ஏ9 வீதியிலிருந்து தெற்கு நோக்கி வரையுள்ள 200 மீற்றர் காணி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேலும் 300 மீற்றர் வரையான காணியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love