Home இலங்கைரணில், காங்கேசந்துறை செல்கிறார்…

ரணில், காங்கேசந்துறை செல்கிறார்…

by admin

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி காங்கேசந்துறை செல்லவுள்ளதாக அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார். காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் அங்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கேசந்துறை துறைமுகம் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட சலுகை அடிப்படையிலான நான்கு கோடி 50இலட்சம் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளநிலையில் 2021 ஆம் ஆண்டு பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையை கொண்ட துறைமுகமாக மாற்றப்படவுள்ளது.

தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காங்கேசந்துறை துறைமுகம் புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், புதிய வாயில் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரட்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More