Home உலகம்சீன அரசைக் கவிழ்க்க முயன்றாராம் – மனித உரிமை செயல்பாட்டாளருக்கு சிறை தண்டனை…

சீன அரசைக் கவிழ்க்க முயன்றாராம் – மனித உரிமை செயல்பாட்டாளருக்கு சிறை தண்டனை…

by admin

சீன அரசை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டின்கீழ் அந்நாட்டின் மனித உரிமை செயல்பாட்டாளரான வழக்கறிஞர் ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த பலரை அந்நாட்டு அரசு கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்து சிறை வைத்ததுடன் அவர்கள்மீது ஆட்சியை கவிழ்க்க சதிச்செயலில் ஈடுபட்டது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

அவ்வகையில், சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டியான்ஜின் பகுதியில் கைதான மனித உரிமை செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான வாங் குவாங்ஸாங் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை விடுதலை செய்யகோரி சமூகவலைத்தளம் மூலம் பிரச்சார இயக்கங்களை நடத்தி வந்த அவரின் மனைவி பீஜிங்கில் இருந்து மொட்டை அடித்த தலையுடன் தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டியான்ஜின் நகருக்கு பேரணியாக சென்றுள்ளார்.

எனினும், அவரது கோரிக்கைகள் அரசால் ஏற்கப்படாத நிலையில் டியான்ஜின் நகர இரண்டாவது நீதிமன்றத்தில் வாங் குவாங்ஸாங் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், தண்டனைக்காலம் முடிந்து அடுத்த ஐந்தாண்டுகள்வரை அவர் தேர்தல்களில் வாக்களிக்கவும், போட்டியிடவும், பொது மேடைகளில் பேசவும், எழுதவும், அரசுப்பணிகளில் சேரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைக்கு சீனாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More