காங்கிரஸ் கடசியின் சிரேஸ்ட தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், உ.பி கிழக்கு பிராந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தியின் கணவரும் தொழில் அதிபருமான ரொபர்ட் வதேரா மீது லண்டனில் 1.9 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய சொத்துகளை முறைகேடாக கொள்வனவு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் ரொபர்ட் வதேரா மற்றும் அவரது நண்பர் மனோஜ் அரோரா மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாக அமுலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அண்மையில் ரொபர்ட் வதேராவும் தொடர்புபட்ட இடங்களில் அமுலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தன் மீது அமுலாக்கத் துறையினர் கைது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி ரொபர்ட் வதேரா டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது பெப்ரவரி 16ஆம் திகதிவரை அவரைக் கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் பெப்ரவரி 6ஆம் திகதி அமுலாக்கத் துறையில் விசாரணைக்கு முன்னிலையாவதுடன் வைப்புத் தொகையாக 1 லட்சம் ரூபா செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.