169
நவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் அவர்கள் அமெரிக்காவுக்கு செல்வதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மீள்குடியேற்ற ஒப்பந்தத்தின் விளைவாக அந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக சிறிய தீவு நாடான நவ்ரூவில் அமைந்துள்ள தடுப்பு காவல் முகாம்களில்தான் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சட்டவிரோதமாக நுழைய முயலும் குடியேறிகள அடைக்கப்படுகிறார்கள் என’பது குறிப்பிடத்தக்கது.
Spread the love