சினிமா பிரதான செய்திகள்

கர்நாடகாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள விஸ்வாசம் :


இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்துள்ள ‘விஸ்வாசம்‘ திரைப்படத்திற்கு கர்நாடகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இத் திரைப்படத்தை கன்னட மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் இவ் வருடம் பொங்கலுக்கு வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் முதலியோர் நடித்த இப் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து காண்பிக்கப்படுகின்றது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் மொழிமாற்ற வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் நாள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.