அடுத்த ஜென்மத்திலும் நடிகையாகவே ஆசைப்படுவதாக கூறுகிறார் பிரபல நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த நடிகை நதியா, 80களின் முன்னணி கதாநாயகி ஆவார். முப்பந்தைத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து வரும் நதியா, இப்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகின்றார்.
நான் மிகவும் மகிழ்வானவள்
அடுத்த ஜென்மத்திலும் நடிகையாக ஆசைப்படறேன். அப்படி நடந்தால், சினிமா வாய்ப்பைத் திறம்பட பயன்படுத்துவேன். எதார்த்தமான, எளிமையான வாழ்க்கை வாழவே ஆசைப்படுவேன். சுயநலமாக செயல்பட்டால், பொய் பேசினால், சொன்ன நேரத்தை மீறினால் எனக்குக் கோபம் வரும். மத்தபடி நான் ரொம்ப ஜாலியானவள்’’ எனக் கூறியுள்ளார்.