கிழக்கு மாகாண ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதியினை கிழக்கு மாகணத்திலுள்ள தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க அம்மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தீர்மானித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்புக்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியினை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.
இது தொடர்பில் நேற்று காலை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு,கல்வி அமைச்சு சமூக சேவைகள் அமைச்சுக்கள் உட்பட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டுவரை கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு, மாதாந்தம் தiலா 500 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தந்தையை இழந்த மாணவர்களது பெயரில் வங்கிக்கணக்கொன்று திறக்கப்பட்டு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் குறிப்பிட்ட மாணவர்களின் வங்கிகணக்கிற்கு அந்த நிதி வைப்பிலிடப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது