ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலமையில் புதிய தேசிய கூட்டணி உருவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணி அமைப்பது தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கைகள் சிறப்பாக நிறைவுபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள வாசுதேவ, புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து, அறிக்கை தயாரிப்பதற்கு குழுவொன்று அமைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மைத்திரி-மகிந்த தலைமையிலான கூட்டணி தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வாறு புதிய கூட்டணி உருவாக்கப்படுமேயானால், இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் இணைந்து உருவாக்கும் புதிய கூட்டணியை முதலாவது கூட்டணியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.